Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  09-01-2021

இன்றைய தியானம்(Tamil)  09-01-2021

மாறும் மனிதன் 

“மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து... கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன்...” – எரேமியா 17:5

பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தங்கைக்கு உதவுவதாக கூறினாள் அக்கா. தங்கையின் மகளுக்கு திருமணம் ஒழுங்கானால் ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாமல் உதவவும் அதை எப்போது வேண்டுமானாலும் கொடு என்றும் கூறினாள். அற்புதவிதமாக நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைத்தது. திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. மலை போல் நம்பியிருந்த அக்காவிடம் உதவியை நாடி நின்றாள் தங்கை. “நான் அப்போதிருந்த சூழ்நிலையில் சொன்னேன். இப்போது அவ்வளவு தொகை கொடுக்குமளவிற்கு என்னிடம் பணமில்லை” என்று கைவிரித்தாள். காரணங்கள் பல சொன்னாலும் தங்கையின் உள்ளத்தில் பெரிய ஏமாற்றம். கொரோனா காலமானதால் அதிக கூட்டத்தைக் கூட்டாமல் எளிய முறையில் திருமணத்தை நடத்தி முடித்தார். ஆம், மனிதனின் அன்பும், மனதும், சிந்தையும் கூட ஒரு நாளில் மாறக் கூடியது. ஏன், வேதாகமத்தில் ஒரு மணி நேரத்திற்குள் மாறிய மனிதர்களைப் பற்றியும் இருக்கிறது. யார் அவர்கள் பார்ப்போமா? 

பவுலின் கப்பல் பயணத்திலே, ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால், பல இரவுகள் தூங்காமல், பட்டினியாய் சோர்ந்து போய் கப்பலிலுள்ள எல்லோரும் மெலித்தா தீவிற்கு வந்தார்கள். முன்பின் தெரியாத அந்த தீவு மக்கள் அவர்களுக்கு பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அவ்வேளையிலே பெய்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி அனைவரையும் சேர்த்துக் கொண்டார்கள். பவுல் சில விறகுகளை வாரி நெருப்பில் போடுகையில் ஒரு விரியன்பாம்பு அனலுறைத்து புறப்பட்டு அவனுடைய கையை கவ்விக் கொண்டது. உடனே அந்த மக்கள் இவன் கொலை பாதகன், இதற்கு சந்தேகமேயில்லை. கடலுக்கு தப்பி வந்தும் விதி விடவில்லை என்றார்கள். ஆனால் பவுல் எந்த சேதமும் அடையாததைக் கண்டபோது இவன் தேவனென்று சொல்லிக் கொண்டார்கள். பாருங்கள் இது தான் மனிதனின் இயற்கை தன்மை. தலையில் வைத்து நம்மை கொண்டாடும் மக்களே, காலின் கீழ் போட்டு நசுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

பிரியமானவர்களே! மனிதன் மனம் மாறுவான். ஆகவே மனிதனை நம்பி ஒரு போதும் தேவனை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிடாதீர்கள். மனிதன் நம்மை பயன்படுத்தி விட்டு உடைப்பான். ஆனால் தேவனோ நம்மை உடைத்து பயன்படுத்துவார். மனிதர்கள் தனக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா என்றெண்ணியே பழகுவார்கள். ஆனால் தேவனோ நம்முடைய நன்மைக்காகவே நம்மை தேடி வருவார். தகுதியுள்ளவனை மனிதன் தேடி போவான்.  ஆனால் தேவனோ தகுதியில்லாதவனை தேடிச் சென்று, தமது கிருபையை பொழிந்து அவனை தகுதிப்படுத்துவார். சூழ்நிலைகள் மாறும்போது மனிதனும் மாறுவான். ஆனால் தேவனோ மாறாதவர். நீங்கள் யாரை நம்பப்போகிறீர்கள்? மாறும் மனிதர்களையா? மாறாத தேவனையா? 
-    Bro. அருண் ஆபேல்

ஜெபக்குறிப்பு:
பைபிள் காலேஜில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை தேவன் தம்முடைய விசேஷித்த ஆவியினால் நிறைத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)